புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவில் 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது . புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலுப்பூர் தாலுகா மேட்டு சாலையில் உள்ள மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு தினங்களில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது இந்த வேலைவாய்ப்பு முகாமில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி,தஞ்சாவூர் ,சென்னை ,காஞ்சிபுரம் ,மதுரை ,கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர் மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாம் மேற்கூறிய நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது என்றும் இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் அனைத்து பட்டயப்படிப்பு வரையிலும் பல்துறை கல்வி தொழிற்கல்வி நர்சிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் குறித்த வேலைவாய்ப்பற்றோர் பங்குபெறலாம் முகாமில் சிரமமின்றி எளிதாக கலந்து கொள்ளும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் இது குறித்த விவரங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் 0432 2222 287 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்
0 Comments